சனி, ஆகஸ்ட் 19, 2017

அதிமுக இரு அணிகளிலும் மூவர் குழு!

அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியிலும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அணியிலும், அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் மொத்தம் 6 பேர்.எடப்பாடி பழனிசாமி தரப்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும், ஓ.பி.எஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர். இந்த 6 பேரும் தான் இரண்டு தரப்பு விஷயங்களையும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.