www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

சசிகலா, தினகரன் அறிவிப்புகள் செல்லாது: எடப்பாடி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். 

அதிமுக அணிகள் இணைப்பு, டிடிவி தினகரனின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார். கட்சி இணைய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வைத்துள்ள நிபந்தனைகள் குறித்தும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களுடன் கேட்டறிந்தார். பின்னர் சசிகலா, தினகரன் அறிவிப்புகள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவை பொதுச்செயலாளராக கழக சட்டதிட்டத்தின் படி புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் வரை நியமிக்கப்பட்டாலும், அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அவரால் செயல்படா நிலை ஏற்பட்டுள்ளதால் பல்வேறு நபர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாலும், கழகத்தின் சட்டதிட்ட விதி 20 (v)  கீழ் படி ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட கழக நிர்வாகிகள் ஒன்றுகூடி கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி வருகிறோம்.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டிடிவி தினகரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி மீண்டும் அவர் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு 15ம் தேதி துணைப்பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. கழகத்தின் சட்டதிட்ட விதி 30 (V) படி விரோதமானது. அவர் தொடர்ந்து 5 ஆண்டு கால உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவர்களால் எந்த பொறுப்பையும் கழக சட்ட திட்ட விதிகளின் படி வகிக்க இயலாது.

கடந்த மார்ச் மாதம் தினகரன் துணைப்பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய பதில் கடிதத்துக்கு ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில் டிடிவி தினகரனின் பெயர் இல்லை என அந்த கடிதத்தை எற்க மறுத்துவிட்டது.

மேலும் துணைப்பொதுச்செயலாளராக தினகரனை நியமனம் செய்த பொதுச்செயலாளர் சசிகலா நியமனமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இவற்றுக்கு மாறாக தனிச்சையாக கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி கழகத்துக்கு பொருப்பாளார்களை நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. கழகத்தை அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று கூடி வழிநடத்தி வரும் நிலையில் கழகத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படுத்த தினகரனால் வழங்கப்பட்ட அறிவிப்புகள் தொண்டர்கள் ஏவரையும் கட்டுப்படுத்தாது. அவரின் இந்த அறிவிப்பின் மூலம் நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள் கழக சட்ட திட்ட விதிகள் படி செல்லக்கூடியவையல்ல. கழக தொண்டர்கள் அதனை நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த தீர்மானத்தின் நகலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 27 நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளனர்.