தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

ஷிகர் தவான், கோலி அதிரடி..! ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது. ஷிகர் தவான் அதிரடியாக 132 ரன்களைக் குவித்தார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி மற்றும் ஐந்து ஒருநாள் போட்டியில் விளையாடிவருகிறது. ஏற்கெனவே மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இன்று இந்திய இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
குணதிலகா 35 ரன்களில் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய டிக்வெல்லா 64 ரன்களைக் குவித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர்.  அதனால் இலங்கை அணி 43.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எதிர்பாரதவிதமாக ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷிகர் தவானுடன் சேர்ந்து கேப்டன் விராத் கோலி களிமறங்கினார். இருவரும் அதிரடியாக தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர். அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 132 ரன்களை குவித்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய விராத் கோலி 82 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பு 220 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.