தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

இரண்டரை மணிநேர கேள்விகளுக்கு சிராந்தி கொடுத்த ஒரே பதில..ஒன்றும் தெரியாது ..

இரண்டரை மணிநேர கேள்விகளுக்கு சிராந்தி கொடுத்த ஒரே பதில
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணி, சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒன்றும் தெரியாது என்றே பதிலளித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தாஜூதீன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும், சிராந்தி ராஜபக்சவின் கீழ் இருந்த சிரிரிய சவிய அறக்கட்டளைக்கு சொந்தமான டிபென்டர் வாகனம் தொடர்பான விசாரணைக்கு நேற்றுக்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு சிராந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.

இரண்டரை மணிநேரம் சிராந்தி ராஜபக்சவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதன் போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எழுப்பிய கேள்விகளுக்கு சிராந்தி பெரும்பாலும் வாயை மூடிக்கொண்டிருந்தார். சில கேள்விகளுக்கு மாத்திரம் தனக்கு ஒன்றும் தெரியாது என்று பதிலளித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொலை தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக சில உயர்மட்ட கைதுகள் தவிர்க்க முடியாதது என்றும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.