www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, ஆகஸ்ட் 19, 2017

பாலச்சந்திரன் படுகொலை இலங்கை இராணுவத்தின் மோசமான செயல்! - எரிக் சொல்ஹெய்ம

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னரே, படுகொலை செய்யப்பட்டார் என தான் வலுவாக சந்தேகிப்பதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "பிரபாகரனின் 12 வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்றே நாங்கள் மிகமிக வலுவாக சந்தேகிக்கிறோம். இது முற்றிலும், மிக மோசமான பொறுப்பற்ற, தீய செயல். இந்த விடயத்தில் இலங்கை படையினர் மிகமிக நன்றாகச் செயற்படாதது துரதிஸ்டம்" எனவும் அவர் கூறியுள்ளார்.