புதன், ஆகஸ்ட் 30, 2017

அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமைச் செயலகம் வர முதல்வர் உத்தரவு..!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமைச் செயலகம் வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

19 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றிருப்பதால் முதல்வர் எடப்பாடி அரசு பெரும்பான்மயை நீருபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறித்தி வருகின்றன. இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை அதிமுக தலைமை கழகத்தில் முதலமைச்சர் எடப்படி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. மேலும் செப்.12 ல் பொதுக்குழுவை கூட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமைச் செயலகம் வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அந்த அந்த மாவட்ட அமைச்சர்களை சந்தித்து அழைத்து வரக்கூறியும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.