தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

சுன்னாகத்தில் ரயில் மோதி இளைஞன் பலிபண்ணைக் கடலில் ஒருவர் பலி

சுன்னாகத்தில் ரயில் மோதி இளைஞன் பலிபண்ணைக் கடலில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி! - மற்றொருவர் மாயம்

யாழ்ப்பாணம், பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதில் இருவர் கடலுக்குள் மூழ்கினர். தேடுதலின் பின்னர், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். நாவாந்துறையைச் சேர்ந்த குயின்சன் என்பவரே இதில் உயிரிழந்துள்ளார். மேலும் காணாமல் போன மற்றுமொரு நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறையில் இருந்து இன்று மாலை கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதி, இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து சுன்னாகம் ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. ரயில் மோதியதால், இளைஞன் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் சுன்னாகம் தொடருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து இன்று மாலை கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதி, இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து சுன்னாகம் ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. ரயில் மோதியதால், இளைஞன் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் சுன்னாகம் தொடருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.