புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஆகஸ்ட் 26, 2017

முதல்வர் தலைமையில் அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் 28-ந் தேதி அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், என சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர். இதற்காக, தனித்தனியாக கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. போன் மூலம் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது. சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சி பதவிகளில் இருந்து நீக்கவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அதேபோல், விரைவில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.