புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

வீடு எங்களுக்கே சொந்தம்: எடப்பாடி பழனிசாமிக்கு ஜெ. அண்ணன் மகன் கடிதம்


ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம், அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை மாலை அறிவித்தார்.

இதனையடுத்து போயஸ் கார்டன் வீடு தங்களின் குடும்ப சொத்து என ஜெ., அண்ணன் மகள் தீபா கூறி இருந்தார். இந்நிலையில் அந்த வீடு தங்களுக்கு தான் சொந்தம் எனவும், அதை நினைவிடமாக மாற்றக் கூடாது எனவும் ஜெ., அண்ணன் மகன் தீபக், முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் “வேதா நிலையத்தை நினைவிடமாக்கும் முன் சட்டப்படி எங்களது கருத்தை கேட்க வேண்டும். போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை.போயஸ் கார்டன் இல்ல வாரிசுகளான தங்களின் கருத்தை கேட்காமல் செய்வது சட்டப்படி தவறு. ஜெயலலிதா தாயார் சந்தியா உயில் படி வேதா நிலையம் எனக்கும் சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. எங்களின் கருத்துக்களை கேட்டறிந்து நினைவிடமாக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.