தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஆகஸ்ட் 26, 2017

புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற முயற்சியா? போலிஸ் பாதுகாப்பு!

அதிமுகவில் உள்கட்சி விவகாரத்தால் தினம் தினம் பரபரப்புக்கு பஞ்சமில்லை. கடந்த சில நாட்களாக தினகரன் அணி எடப்பாடி அணி என்ற பிரச்சனை உச்சத்திற்கு போனது. தன்னை எதிர்த்து பேட்டி கொடுத்தால் தன் துணைபொதுச்செயலாளர் பதவியை பயன்படுத்தி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பறித்துவிட்டு தனது ஆதரவாளர்களை அந்த பதவிகளில் அமரச் செய்தார். 

இதனால் ஒரே மாவட்டத்திற்கு இரு மாவட்ட செயலாளர்கள் உள்ள கட்சியாக உள்ளது. திருவாரூர் மாவட்ட செயலாளரான அமைச்சர் காமராஜ் நீக்கப்பட்டு திவாகரனின் ஆதரவாளரான எஸ்.காமராஜ் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டதால் ஊர்வலம் பட்டாசு வெடிப்பு நடந்த நிலையல் தினகரன் படம் எரிக்கப்பட்டதால் தினகரன் தரப்பு கட்சி அலுவலகத்தை கைப்பற்றிவிடுமோ என்ற அச்சத்தில் அமைச்சர் காமராஜ் தரப்பு போலீசை குவித்தது.

அதே போல புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக உள்ள வைரமுத்து மாற்றப்பட்டு குடவாசல் எம்.ஆர் மருமகன் கார்த்திகேயன் புதிய மாவட்ட செயலாளராக தினகரன் அறிவித்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் வைத்துள்ளார். அதனால் நேற்று இரவில் இருந்து மாவட்ட கட்சி அலுவலகத்தில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினகரன் தரப்பு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தரப்பு ஆள் பலத்துடன் வந்து கட்சி அலுவலகத்தை கைப்பற்றிவிடும் திட்டம் உள்ளதாகவும் அதை தடுக்கவே போலீஸ் குவிப்பு என்றும் ர.ரக்கள் கூறுகின்றனர்