புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஆகஸ்ட் 26, 2017

வடக்கில் பாரிய போராட்டங்களுக்கு ஏற்பாடு

வடக்கு மாகாணத்தில், எதிர்வரும் 30ஆம் திகதி பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“போர் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களில் நூற்றுக்கொருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு, ஓகஸ்ட் 30 ஆம் திகதி, வவுனியாவில் பெரும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவை பிரதானப்படுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் நடத்தவுள்ளோம்.

வடக்கில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 150 நாட்களையும் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக, 30ஆம் திகதி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இப்போராட்டத்தில் அனைவரும் ஒன்றினைய வேண்டும்” என்றார்.