புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், ஆகஸ்ட் 28, 2017

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உடன் பழனிசாமி, பன்னீர் ஆலோசனை

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தமிழக அரசின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்ததன் பேரில், ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் பொதுச் செயலாளர் செயல்பட முடியாத நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பரிந்துரைத்தால் பொதுக்குழுவை கூட்டலாம் என கட்சி விதி இருப்பதால், அதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.