தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

அவுஸ்ரேலிய தேர்தலில் சாவகச்சேரி இளைஞன் போட்டி

அவுஸ்ரேலிய தேர்தலில் பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் போட்டியிடவுள்ளார். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31
வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இறுதிப் போர் காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்ரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வாய்ஸ் ஒப் தமிழ்” என்னும் அமைப்பை நிறுவியுள்ளார்அத்துடன் அவுஸ்ரேலியாவில் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்ரேலியாவுக்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் ஒரு முன்னணி செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார். இந்த நிலையிலேயே அவர் பசுமைக்கட்சியின் வேட்பாளராக சிட்னி தெற்கு பிராந்தியத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பிரோஸ்பெக்ட் தொகுதியில் தாம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.