வியாழன், ஆகஸ்ட் 31, 2017

அமைச்சர் பதவியை பறித்தது சட்டவிரோதம்! - விக்கிக்கு எதிராக டெனீஸ்வரன் வழக்கு [

தனது அமைச்சுப் பதவியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முறை தவறிப் பறித்துள்ளார் என்று முன்னாள் வடமாகாண
போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன் கொழும்பு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி லிலாந்தி டி சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவின் வழிகாட்டலின்படி இந்த மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
தனது அமைச்சுப் பதவியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முறை தவறிப் பறித்துள்ளார் என்று முன்னாள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன் கொழும்பு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி லிலாந்தி டி சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவின் வழிகாட்டலின்படி இந்த மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியைப் பறித்து வடமாகாண உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவனேசன் ஆகியோருக்குப் பகிர்ந்தளித்துள்ளார். அவர்கள் அந்த அமைச்சர்களாகத் திகழ்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கும் படி அந்த மனுவில் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு இடைக்காரத் தடையுத்தரவு விதிக்கும்படியும், உரிய விசாரணையின் பின்னர் அவ்வாறு வெளியேற்ற விடுத்த உத்தரவு முறைமை தவறானவை என்று பிரகடனப்படுத்தும் படியும் பா.டெனீஸ்வரன் இந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

டெனீஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் எதிர் மனுதாரர்களாக, அனந்தி சசிதரன், சிவனேசன், சர்வேஸ்வரன், குணசீலன், முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.