வியாழன், ஆகஸ்ட் 24, 2017

பொலித்தீன் தடை அடுத்தவாரம் முதல் அமுல்

நாட்டில் பொலித்தீன் பாவனையை தடைசெய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. இருப்பினும் 2018 ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கமே அதற்கான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பொலித்தீன் பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொலித்தீன் உற்பத்தியாளர்களுக்கு மாற்றீடுகளை அறிமுகம் செய்து அவர்களை அதில் ஈடுபடுத்துவதற்காகவே எதிர்வரும் ஜனவரி மாதம் வரை காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்