புதன், ஆகஸ்ட் 23, 2017

பொலிஸ் சூட்டில் கொல்லப்பட்ட பல்கலை. மாணவன் குடும்பத்துக்கு வீடு

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் சுல
க்ஸனின் குடும்பத்துக்கு அமைத்துக் கொடுக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.
இந்த நிகழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தலைமையில் சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியில் நேற்று நடைபெற்றது.
நண்பகல் 12 மணியளவில் வீட்டுக்கான அடிக்கல்லை மீள்குடியேற்ற அமைச்சர் முன்னிலையில் உயிரிழந்த சுலக்ஸனின் தாயார் நட்டாா்.
நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலா் நா. வேதநாயகன், யாழ் மாவட்ட மேலதிக (காணி) மாவட்ட செயலா் எஸ். முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனா்.