புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஆகஸ்ட் 19, 2017

இணைவதில் இழுபறி - மீண்டும் பாஜகவிடம் சென்றுள்ள ஓ.பி.எஸ். தரப்பு

அதிமுகவில் இரு அணிகளும் இணைப்பு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதற்கு காரணமாக கூறப்படுவது முக்கியமாக இரண்டு விசயங்கள். ஒன்று அமைச்சர் பதவியில் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆன செம்மலை மற்றும் மாஃபா பாண்டியராஜனுக்கும் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளவேண்டும் என்பது.

இந்த பேச்சுவார்த்தையில் நிதி மற்றும் வீட்டுவசதி துறை இந்த துறைதான் கொடுக்கப்படும் என்றும், மேலும் செம்மலைக்கு அமைச்சர் பதவி கொடுக்க இயலாது என்றும் முதல்வர் எடப்பாடி தரப்பு கூறியுள்ளது. 

அதேபோல் மத்திய அமைச்சர் பதவியில் ஓபிஎஸ் அணியில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் என பேசப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திருப்தி இல்லை என கூறிவிட்டார். 
 
ஓபிஎஸ்க்கு துணை முதல்வர், அவரை சார்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு, அமைச்சர் பதவி, எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் பதவி இப்படி முக்கியதுவம் வாய்ந்த பதவிகள் கிடைக்கவேண்டும் என்று மீண்டும் பாஜக-விடம் பஞ்சயாத்துக்கு சென்றுள்ளது ஓபிஎஸ் தரப்பு.