புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

ஜெயலலிதா சமாதியில் எம்.எல்.ஏ-க்கள்: அணிகள் இணைப்பு 

நேரம் 7.15: மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வருகை தர தொடங்கியுள்ளனர்.

நேரம் 7.12: திருவாரூரில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கலந்துகொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது.
நேரம் 7.07:  பன்னீர்செல்வம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்
நேரம் 6.45: * அ.தி.மு.க-வின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு செல்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 
* அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சமாதி

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.
இதனிடையே, துணைப் பொதுச்செயலாளர் தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதேபோல்,ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இதனால், இரு அணிகள் விரைவில் இணைய உள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பன்னீர்செல்வத்தை இன்று காலை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி சந்தித்தனர். இதையடுத்து, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு குறித்து, பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல, க்ரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் திடீரென்று அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையம் சென்ற அமைச்சர்களுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.