தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஆகஸ்ட் 19, 2017

மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்?

எங்கள் அணியின் அச்சாணியாக இருக்கும் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் மற்றும் சீனியர்களான பொன்னையன், மதுசூதனன், நத்தம்,
மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்களுக்கு என்ன முக்கியத்துவம் தரப்போகிறீர்கள் என்பதற்கும் எடப்பாடி தரப்பில் இதுவரை பதில் இல்லை. டெல்லி லாபியிலிருந்து தம்பிதுரையை ஒதுக்கி வைத்துவிட்டு அந்த இடத்தை மைத்ரேயனுக்கு தரவேண்டும் அல்லது டெல்லி பிரதிநிதி பதவி தரவேண்டும் என்கிறோம். இதற்கும் எடப்பாடியிடம் பதில் இல்லை'' என்று விரிவாக சுட்டிக்கட்டினார்கள். 

இதற்கிடையே, மூத்த அமைச்சர்கள் தரப்பில் விசாரித்தபோது, "வெளிப்படையாக தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர். எங்களுக்கான ஆதரவை அவர்கள் 

விலக்கிக்கொண்டால்  122 என்கிற வலிமை 102 ஆகிவிடும். ஓ.பி.எஸ். அணியை இணைப்பதன் மூலம் ஓ.பி.எஸ். உள்பட 11 பேர் என்பதால் 113 ஆக எண்ணிக்கை அதிகரிக்கும். ஓ.பி.எஸ். அணி இணையும் பட்சத்தில் மெஜாரிட்டிக்கான மேலும் 4 பேரை இழுப்பது பெரிய விசயமல்ல. எங்கள் தரப்பை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களில் 30 பேர் அமைச்சர் கனவில் இருக்கிறார்கள். 

10, 15 ஆண்டுகளாக அமைச்சர்களாகவே இருக்கும் நபர்களை எடுத்துவிட்டு எங்களை அமைச்சராக்குங்கள் என்கிறார்கள். இப்படி பல சிக்கல்கள்