புதன், ஆகஸ்ட் 23, 2017

வடக்கு சுகாதார அமைச்சராக குணசீலனை நியமிக்குமாறு ஆளுனருக்கு முதலமைச்சர் பரிந்துரை

மன்­னார் மாவட்­டத்­தில் இருந்து வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட ரெலோ­ உறுப்­பி­ன­ரான ஜி.குண­சீ­லனை வடமாகாண சுகா­தார அமைச்ச­ராக நிய­மிக்கு­மாறு, முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன், ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரேக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும், பா.டெனீஸ்­வ­ரனுக்குப் பதிலாக, தமது கட்சி சார்­பில் க.விந்­தனை அமைச்­ச­ராக நிய­மிக்­கு­மா­று முத­ல­மைச்­ச­ரி­டம் ரெலோ கோரி­யி­ருந்­தது. ஆனா­லும் அந்­தக் கட்­சி­யி­னுள் ஜி.குண­சீ­லனை நிய­மிக்க வேண்­டும் என்று ஒரு தரப்பு வேண்­டு­கோள் முன்­வைத்­தி­ருந்­தா­லும், கட்­சி­யின் இறுதி முடி­வாக க.விந்­தனே பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தார். எனினும், ஜி.குண­சீ­லனை சுகா­தார அமைச்­ச­ராக நிய­மிப்­ப­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரேக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்­றுக் காலை கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.