தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஆகஸ்ட் 14, 2017

மோடியை சந்தித்தார் ஓ.பி.எஸ்
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை டெல்லி சென்றிருந்தார். பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் சந்தித்துப் பேசவில்லை. பின்னர் ஞாயிற்றுக்கிழமை மும்பை நோக்கி சென்ற அவர்,  மகாராஷ்ட்ரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா ஆலயத்தில் தரிசனம் செய்தார். 

இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.