புதன், ஆகஸ்ட் 30, 2017

கருத்தடை மாத்திரைகளுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கருத்தடை மாத்திரைகளுடன் இந்தியர் ஒருவர்
கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் கைதுசெய்யப்பட்டார்.
யு.எல்.196 ரக வானூர்தியில் அவர் நேற்றிரவு இலங்கை வந்துள்ளார்.
32 வயதுடை குறித்த இந்தியரிடமிருந்து 16 ஆயிரத்து 930 கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரான பிரதி சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 23 லட்சத்து 13 ஆயிரத்து 503 ரூபா பெறுமதியான கருத்தடை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன்இ சந்தேகத்துக்குரியவர் ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.