புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

அரசியலமைப்பு வரைவு பணிகள் தாமதம் - பிரித்தானிய குழுவிடம் சம்பந்தன் விசனம்

காணாமல் போனோரின் பிரச்சினை, காணிகளை விடுவித்தல், புதிய அரசமைப்பு வரைவு ஆகியவற்றின் முன்னேற்றம் போதுமானளவு இடம்பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தெரிவித்தார். ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலான பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவ
ர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று இடம்பெற்றது. அந்தச் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
இந்த பல்கட்சி எம்.பிக்கள், தமது இலங்கை அனுபவங்களை சம்பந்தனுடன் பகிர்ந்து கொண்டனர். இதன்போது, காணாமல் போனோரின் குடும்பத்தினர் கஷ்டங்கள், காணிகளை விடுவித்தல், புதிய அரசமைப்பு வரைவு பற்றிய விடயங்கள் பேசப்பட்டன. மேற்படி விடயங்கள் தொடர்பில், தூதுக் குழுவினருக்கு விளக்கிய எதிர்க்கட்சித் தலைவர், இவை தொடர்பான முன்னேற்றம் போதுமான வேகத்தில் காணப்படவில்லை எனக் கூறினார்.