தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஆகஸ்ட் 19, 2017

தர்மயுத்தத்தின் மூலக்கருவே நிறைவேற்றப்படவில்லை’ - கே.பி.முனுசாமி பேட்டி

''அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு தாம் முட்டுக்கட்டையாக இல்லை'' என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கே.பி.முனுசாமி

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

ரஜினிகாந்த்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு!
போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். Thirunavukkarasar meets Rajinikanth

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18 - புறப்படுகிறது புதிய படை!

சரும நோய்களைத் தீர்க்கும், மனதுக்கு இதம் தரும்... ஆயுர்வேத ஆடைகள்!

அணிகள் இணைப்புக்காக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நிறைவேற்றியதாகவும், அதனால் அணிகள் இணைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அ.தி.மு.க முகாம் நேற்று பரபரப்பானது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் இணைப்புக்கான அறிவிப்பு இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதற்காக ஜெயலலிதாவின் சமாதியைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திடீரென நேற்று மாலை மலர்களால் அலங்கரித்தனர். அதேபோல், அ.தி.மு.க. எம்எல்ஏ-க்களும் மெரினா நோக்கி படையெடுத்தனர். ஆனால், அ.தி.மு.க-வின் இருதரப்பிலிருந்தும் இணைப்பு குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளிவரவில்லை. அணிகள் இணைப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த கே.பி.முனுசாமி முட்டுக்கட்டை போடுவதாகச் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், அணிகள் இணைப்புக்கு நான் முட்டுக்கட்டையாக இல்லை என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘'தர்மயுத்தத்தின் மூலக்கருவே சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவது தான். மூலக்கரு நிறைவேற்றப்படாமல் அணிகள் இணைப்பு சாத்தியமில்லை. தொண்டர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதை முட்டுக்கட்டை என்று சொல்வது சரியாக இருக்காது. ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் முழுமையாகக் கட்டுப்படுவோம்'’ என்று கூறினார்.