செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

ஆளுநரைச் சந்திக்க எம்.பி. மைத்ரேயன் வருகை!

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைத்து ஆளுநரைச் சந்திக்க எம்.பி.மைத்ரேயன் வருகை தந்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் மாளிகையில், ஆளுநரைச் சந்திக்க இருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளனர். இதேசமயம், அதிமுக எம்.பி. மைத்ரேயன் ஆளுநரைச் சந்திக்க வந்துள்ளார்.