புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஆகஸ்ட் 26, 2017

உயர்தர மாணவர்களுக்கான இரு பரீட்சைகள் ஒத்திவைப்பு!

எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள்கள் 4 ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளன.

அன்று முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடவுள்ளதாலேயே பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

2 ஆம் திகதி நடைபெறவிரந்த பொது அறிவுப் பரீட்சையும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இரண்டாம் பகுதிப் பரீட்சையும் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று 8.30 மணி தொடக்கம் 11 மணி வரை பொது அறிவு பாடப் பரீட்சை இடம்பெறும் என்றும் , பிற்பகல் 12.30 மணி தொடக்கம் 3.30 மணி வரை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இரண்டாம் பகுதி பரீட்சை இடம்பெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது