தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஆகஸ்ட் 21, 2017

ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் அலங்கரிப்பு!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தலைமைக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
போர்க்கொடி தூக்கினார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தியானத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தலைமைக்கு எதிராக முதன்முறையாக மவுனம் கலைத்தார். அதன்பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி, சசிகலா சிறை செல்ல நேரிட்டது. இதையடுத்து, முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.

இந்தநிலையில், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவைத்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைய உள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச உள்ளனர். அணிகள் இணைப்பு முடிந்தவுடன் அவர்கள் இருவரும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதற்காக மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தைப் பொதுப்பணித்துறையினர் மலர்களால் அலங்கரித்துள்ளனர். மேலும், மெரினா பகுதியில் போலீஸார் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமையே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, இரண்டு பூங்கொத்துகளும் நினைவிடத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தன. மேலும், ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும் தொண்டர்களும் குவிந்தனர். ஆனால், அதிகாரப்பகிர்வு தொடர்பான ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருந்ததால், அணிகள் இணைப்பில் இழுபறி ஏற்பட்டது. இந்தநிலையில், ஜெயலலிதா நினைவிடத்தைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்களால் மீண்டும் அலங்கரித்துள்ளனர்.