வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

கிளிநொச்சியில் நேற்றிரவு இரண்டு தமிழ் இராணுவ சிப்பாய்களுக்கு வாள்வெட்டு

கிளிநொச்சி- ஊற்றுப்புலம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு தமிழ் இராணுவத்தினர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இடப்பக்க கைகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. வாள்வெட்டுக்கு இலக்கான இரண்டு தமிழ் இராணுவத்தினரும் கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. எனினும், இவர்கள் மீது வாள்வெட்டு நடத்தியது யார் என்ப விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.