ஜெனிவாவில் இருந்து தூக்கப்படுகிறார் ரவிநாத ஆரியசிங்கமீண்டும் மழை! சென்னை மக்களுக்கு நல்ல செய்திபதவிக்காலம் முடிவது எப்போது? - உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோருகிறார் மைத்திரி வடக்கில் விசேட பொலிஸ் குழுவை உருவாக்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கைவைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் - ஹெச்.ராஜா போர்க்கொடிஅடுத்த ரஜனி படத்தை பகிஸ்கரிப்போம் , லண்டன் நாம்தமிழர் 70

வியாழன், ஆகஸ்ட் 24, 2017

பேரறிவாளனுக்கு பரோல் - அரசாணை வெளியீடு..!
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி அரசைணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 26 ஆண்டுகள் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் தனது தந்தை உடல்நலக் குறைவாக இருப்பதால் தன்னை பரோலில் விடுவிக்குமாறு பேரறிவாளன் கோரியிருந்தார். பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, பேரறிவாளனை பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவு வேலூர் சிறைத்துறை டிஐஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.