திங்கள், ஆகஸ்ட் 28, 2017

புங்குடுதீவு ஊரதீவு மாணவன் உட்பட ஆறு மாணவர்கள் யாழ். மண்டைதீவு, சிறுதீவு கடலில் பலி





இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாகவும், காணாமல் போன ஒருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.புங்குடுதீவு ஊரைதீவை சேர்ந்த நடராசா சிவா ( பா ணவிடை சிவன் ஆலய  பொருளாளர் ) என்பவரின் 18 வயது  மகனும் இந்த சம்பவத்தில் பலியானதாக அறிய வருகிறது . இவர் ஜால பெருமாள் கோவிலடியில் வசித்து வந்தவர  ஆவார் இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நண்பன் ஒருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது 18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட றஜீவ், பிரவீன், தனுரதன், தனுசன் மற்றும் செல்வின் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை தினேஸ் என்ற மாணவன் காணாமல் போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
உயிரிழந்த அனைவரும், இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. பண்ணை பகுதியில்நின்ற படகு ஒன்றையெடுத்து தூ ரமாக  சென்ற பொது படகு கவிழ்ந்ததினால் இவர்கள்  கடலில் மூழ்கி பலியா னா ர்கள் ஒருவர் மட்டும் தப்பி உள்ள போதும் அவர்  அதிர்ச்சிக்குள்ளாகி   நினைவற்று  உள்ளதாக தெரிகிறது  நடந்த சம்பவம் பற்றி  சொல்லமுடியா தவராக  காணப்படுகிறார்  படகில் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் நல்லூர், கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.