செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

எடப்பாடிக்கு ஆதரவில்லை!- ஆளுநரிடம் கடிதம் வழங்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்!

நேற்று அதிமுக-வில் பிளவுபட்டுக் கிடந்த இரு அணிகளும் இணைந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தினகரனுடன் ஆலோசனை நடத்திய அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மெரினாவில் உள்ள் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்கள், நாளை ஆளுநரைச் சந்தித்து முறையிட இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், அறிவித்ததைப் போல தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று காலை ஆளுநரை ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்களது ஆதரவில்லை என கடிதம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.