தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மாறன் சகோதரர்கள்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த
மேல்முறையீட்டு வழக்கில் பதிலளிக்கக்கோரி மாறன் சகோதரர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக நான்கு வாரத்தில் பதிலளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு  நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

.