செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

ம்பிக்கை வாக்கெடுப்பை பரிசீலிப்போம்!'- மு.க.ஸ்டாலின் அதிரடி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெ
றுவதாக, டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவந்தால், அதைப் பரிசீலிப்போம்' என்று கூறியுள்ளார்.
ஸ்டாலின்
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஊழல் அ.தி.மு.க அணிகளை இணைப்பதற்கு மோடி துணை நின்றிருக்கிறார். அவர் நேற்று வாழ்த்துச் சொன்னதே, அதற்கான சாட்சி. அ.தி.மு.க-வின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ-க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றிருக்கின்ற நிலையில், ஆளுநர் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்பட்சத்தில் அதைப் பரிசீலிப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.