வியாழன், ஆகஸ்ட் 24, 2017

புதுக்­கு­டி­யி­ருப்புவிக்னேஸ்வரா வி. கழகக் கால்பந்தாட்ட முடிவுகள்

புதுக்­கு­டி­யி­ருப்பு விக்­னேஸ்­வரா விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும், கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் நேற்றும், நேற்­று­முன்­தி­ன­மும் அதற்கு முன்யை நாளும் இடம்­பெற்ற ஆட்­டங்­க­ளின் முடி­வு­கள் வரு­மாறு.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை இடம்­பெற்ற ஓர் ஆட்­டத்­தில் கிளி­நொச்சி உருத்­தி­ர­பு­ரம் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து முல்­லைத்­தீவு சென். யூட் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. இதில் முல்­லைத்­தீவு சென். யூட் விளை­யாட்­டுக் கழக அணி 4:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

தொடர்ந்து இடம்­பெற்ற ஆட்­டத்­தில் சுப்­பர்­ராங் விளை­யாட்டு கழக அணியை எதிர்த்து இர­ணை­மா­தா­ந­கர் சென். மேரிஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. இதில் சென். மேரிஸ் அணி 2:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

பிறி­தொரு ஆட்­டத்­தில் உடுப்­புக்­கு­ளம் அலை­யோசை விளை­யாட்டு கழக அணியை எதிர்த்து செந்­த­மிழ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. இதில் செந் த­மிழ் விளை­யாட்­டுக் கழக 3:2 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

நேற்­று­முன்­தி­னம் காலை இடம்­பெற்ற முத­லா­வது ஆட்­டத்­தில் இர­ணை­மாதா நகர் சென். மேரிஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து உடுத்­துறை செந்­த­மிழ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

இதில் செந் த­மிழ் விளை­யாட்­டுக் கழக 2:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது. பிறி­தொரு ஆட்­டத்­தில் இர­ணைப்­பாலை சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து உருத்­தி­ர­பு­ரம் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறைவு வரை எந்த அணி­யா­லும் கோலெ­த­னை­யும் பதி­வு­செய்ய முடி­ய­வில்லை. இத­னால் ஆட்­டம் சம­நிலை கண்­டது.

மற்­றொரு ஆட்­டத்­தில் சுப்­பர்­ராங் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அலை­யோசை விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறைவு வரை எந்த அணி­யா­லும்
கோலெ­த­னை­யும் பதி­வு­செய்ய முடி­ய­வில்லை. இத­னால் ஆட்­டம் சம­நிலை கண்­டது.

தொடர்ந்து நடை­பெற்ற ஆட்­டத்­தில் வவு­னியா மரு­த­நிலா விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து உருத்­தி­ர­பு­ரம் அலை­யோசை விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. இதில் உருத்­தி­ர­பு­ரம் அணி 3:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

நேற்­றுக் காலை இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் சென். மேரிஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அலை­யோசை விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. 2:1 என்ற கோல் கணக்­கில் அலை­யோசை அணி வெற்­றி­பெற்­றது.

தொடர்ந்து நடை­பெற்ற ஆட்­டத்­தில் வவு­னியா மரு­த­நிலா அணியை எதிர்த்து எதிர் சென். யூட் அணி மோதி­யது. 3:0 என்ற கோல் கணக்­கில் சென். யூட் வெற்றி­பெற்­றது.