திங்கள், ஆகஸ்ட் 21, 2017

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தனநீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிமுகவின் இரு அணிகளும் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. கட்சி அலுவலகத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அணிகள் இணைப்பை உறுதி செய்தனர்.

இருவரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதிமுகவில் 6 மாதங்களாக பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் தற்போது இணைந்தன.  அமைச்சரவை பொறுப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.