புதன், ஆகஸ்ட் 30, 2017

சர்வதேச காணாமல் போனோர் தினம் - வடக்கில் இன்று போராட்டங்களுக்கு அழைப்பு

இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று வடக்கில் மாவட்டங்கள் தோறும் போராட்டங்களை நடத்தவுள்ளனர். இதில், பொதுமக்கள், அமைப்புக்கள், அரசியல்வாதிகளையும் இணைந்து கொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

புலம்பெயர் உறவுகளும் எமக்காக ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாக, கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கோரிக்கை விடுத்தனர்.