புதன், ஆகஸ்ட் 23, 2017

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் சிறை வைக்கப்படும் தனியார் விடுதி இதுதான்!

இதையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேரையும் கூவத்தூர் பாணியில், புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி-கடற்கரை சாலையில் அரியாங்குப்பத்தையடுத்து, கடற்கரை கிராமமான சின்ன வீராம்பட்டினத்திலுள்ள ‘விண்ட் ஃப்ளவர்’ (Wind flower) என்ற கடற்கரையோர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த விடுதியின் முன்பக்க கேட் மூடப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுஇன்னும் சிறிது நேரத்தில், விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்க உள்ளனர். ரிசார்ட்டில், மொத்தம் 20 அறைகள் தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.