தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

வடக்கு மக்களின் வளங்களை அபகரிக்கும் இராணுவம்! - ஐ.நா தூதுவரிடம் முதலமைச்சர் முறைப்பாடு

வடக்கில் இன்னும் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் மக்களுடைய பயிர்நிலங்களையும் அலுவலக கட்டடங்களையும் இயற்கை வளங்களையும் அவர்கள் பயன்படுத்தி வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இன்னும் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் மக்களுடைய பயிர்நிலங்களையும் அலுவலக கட்டடங்களையும் இயற்கை வளங்களையும் அவர்கள் பயன்படுத்தி வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட இணைப்பாளர் ஊனா மெக்கோலி தலைமையிலான குழுவினர் இன்று கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பயன்படுத்துகின்றனர். தெற்கிலிருந்து பிரசித்தமாகவே மீனவர்களை அழைத்து வருவதுடன் அந்த மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர். வடக்கு மீனவ சமுதாயத்தினர் அச்சப்படுவதற்கு இது பிரதான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதாரண நடைமுறைகளை மீறிய விதத்தில், காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லிம்களுக்காக வீதிகளும் வீடுகளும் அமைக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.