வியாழன், ஆகஸ்ட் 31, 2017

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்த எம்.எல்.ஏ-க்கள்!’ - ஆலோசனைக் கூட்ட களேபரம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனம்விட்டுப் பேசிய எம்.எல்.ஏ-க்களில் பலர், தங்களின் மனக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்துள்ளனர். மாவட்டத்தில் நடக்கும் உள்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேசியுள்ளனர். அதில் சில எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர் பதவி, வாரியம், கட்சிப்பதவி எனத் தங்களின் கோரிக்கைகளை விடுத்ததாகவும் சசிகலாவுக்கு எதிராக எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை இன்று சந்தித்தார். எம்.எல்.ஏ-க்களிடம் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். எம்.எல்.ஏ-க்களிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் மனநிலையை முழுமையாக அறிய, சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அதற்கு எம்.எல்.ஏ-க்களும் தங்களின் மனக்குமுறல்களை முதல்வரிடம் சொல்லியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சில எம்.எல்.ஏ-க்கள் மாவட்டத்தில் நடக்கும் உள்கட்சி விவகாரங்களை விரிவாகச் சொல்லியுள்ளனர். அதோடு, தங்களின் விருப்பங்களையும் மனம்விட்டுக் கூறியுள்ளனர். எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பங்கேற்ற எம்.எல்.ஏ., ஒருவரின் பேச்சைக் கேட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்தாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த எம்.எல்.ஏ., தரப்பினர், "எங்கள் மாவட்டத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள், எங்களிடம் கட்சி விவகாரங்கள்குறித்து ஆலோசனை நடத்துவதில்லை. தன்னிச்சையாக அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். கட்சிப் பதவியிலிருந்து எல்லாமும் அவர்கள் தரப்பினருக்கே கிடைக்கின்றன. குறிப்பாக, அரசு ஒப்பந்த வேலைகள்கூட அந்தத் தரப்பினருக்கே வழங்கப்படுகின்றன.

மாவட்டத்தில், கட்சியினரின் செயல்பாடுகளை யாரிடமும் முறையிட முடியவில்லை. கூவத்தூரில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை. தவறுசெய்த நிர்வாகிகள் மீது கட்சியில் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதை, அதிகாரத்திலிருக்கும் கட்சியினர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் எம்.எல்.ஏ-க்களுக்குக் கிடைக்கும் மரியாதைகூட எங்களுக்குக் கிடைப்பதில்லை என்று கட்சியின் உள்விவகாரங்களை முதல்வரிடம் விரிவாகத் தெரிவித்தோம்.

அதையெல்லாம் அமைதியாகக் கேட்ட முதல்வர், இன்னும் சில மாதங்களில் ஜெயலலிதா இருந்ததைப் போல, கட்சி ராணுவக்கட்டுப்பாடோடு செயல்படத் தொடங்கிவிடும். அதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. உங்களின் ஆதரவு, இந்த ஆட்சிக்குக் கண்டிப்பாகத் தேவை. நம்முடைய எதிரிகளால் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் உங்களுக்குத் தெரியும். உங்களின் மனக்குமுறல்களுக்கு விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.

அடுத்து திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ. ஒருவர், "கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா, தினகரன் பேச்சுக்குக் கட்டுப்பட்டு முடிவு எடுத்தோம். தற்போது, ஓ.பன்னீர்செல்வத்துக்காக சசிகலா, தினகரனுக்கு எதிரான முடிவை எடுத்துள்ளோம். இதனால், ஏற்படக்கூடிய விளைவுகளைச் சமாளிக்க நாங்கள் உங்களுடன் உறுதுணையாக இருப்போம்" என்றவர், சில நிமிட அமைதிக்குப் பிறகு, முதல்வரிடம் மனம்திறந்து பேசியிருக்கிறார்.
“தற்போது அமைச்சரவையில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கட்சிக்காகப் பல ஆண்டுகளாக உழைத்த என்னைப் போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த சமயத்தில் அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்படும். அதில் யாருக்கு வேண்டுமானாலும் அமைச்சர் பதவி கிடைக்கும். ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலை அப்படியல்ல. மேலும், தினகரன் தரப்பிலிருந்து எனக்கு அழைப்பு வந்தவண்ணம் உள்ளது" என்று கூறியிருக்கிறார்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

ஜுலி, ஆர்த்தி பேக் டூ ஃபார்ம்... பாவம் ஆரவ்! (66-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
ஆரத்தி, trigger ஆரத்தியாக மாறி ஓவியா விஷயம் தொடர்பாக ஆரவ்வை கேள்விக் கணைகளால் துளைத்தார். “நீங்க ஜெயிச்சு வரும் போது ஓவியா வெளில இருந்தா என்ன பண்ணுவீங்க?.... Bigg boss Tamil updates day 66 - Julie and Harathi back to form

ஆதாரைக் கட்டாயமாக்கும் காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

மன அழுத்தம் போக்கி ஆரோக்கியம் அளிக்கும் களரி! - அசத்தல் அம்மா `பத்மஸ்ரீ' மீனாட்சி
உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றவே நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். அதற்கு ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் நமக்குத் தேவை. குறிப்பாக இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, மக்கள் பிரதிநிதிகளான உங்களின் ஆதரவு தேவை. ஒருவேளை மீண்டும் சட்டசபையில் பெருபான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், கண்டிப்பாக இந்த ஆட்சியை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை விடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கு சம்மதம் என்று பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்கும் முதல்வரிடம், ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொடுத்து பேசியிருக்கின்றனர். இதனால், முதல்வரும் அவரது தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. அதே நேரத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களால் ஆட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டால், அதை எப்படி சமாளிக்கலாம் என்றும் ஒவ்வொரு எம்.எல்.ஏ-விடமும் கருத்துக் கேட்டுள்ளார் முதல்வர். எம்.எல்.ஏ-க்களிடம் பெறப்படும் தகவலைக்கொண்டு, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெக்க அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகிவிட்டனர் முதல்வர் தரப்பினர்.