தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஆகஸ்ட் 11, 2017

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே லசந்த கொல்லப்பட்டார்! - நீதிமன்றம் முடிவு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கூரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்க சடலம் தொடர்பில் நடத்தப்பட்ட இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையை அடிப்படையாக கொண்டு கல்கிசை நீதpவான் நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பு நகருக்கு அருகில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். அத்திட்டிய பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் நடந்தது. லசந்த சுட்டுக்கொல்லப்பட்டதாகவே அப்போது செய்திகள் வெளியாகியதுடன், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அப்படியே தெரிவிக்கப்பட்டிருந்தது.