புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

காவிரி புஷ்கர விழாவில் பங்குபெறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா, செப்டம்பர் 12 ம் தேதி தொடங்கி 12 நாள்கள் நடக்கிறது. நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டத்தில் செப்டம்பர் 12 - ம் தேதி தொடங்கி, 24 -ஆம் தேதி வரை மஹா புஷ்கர விழா நடைப்பெறவுள்ளது. இவ்விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புனித நீராடுகிறார் என்று  ஓ.எஸ்.மணியன் அறிவித்திருந்தார். இவ்விழாவுக்கான வேலைகளில் கிட்டத்தட்ட 80 சதவிகித வேலைகள் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் விழா நடைபெறும் 12 நாள்களும்  நடைப்பெற உள்ள சிறப்புக் கலைநிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கலைநிகழ்ச்சிகளின் விவரங்கள்:
செப் - 12: காஞ்சி சங்கராச்சாரியர்கள் பங்கேற்கும் விருது வழங்கும் விழா, இதைத் தொடர்ந்து டாக்டர் கணேஷின் பக்திப்பாடல்கள்.
செப் - 13: திருவானைக்காவல் ஓதுவார் சிவசம்பவாரின் தேவார இன்னிசை, மணிகண்டனின் சொற்பொழிவு.
செப் - 14: காஞ்சி ஜெயேந்திர சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி, மும்பை கல்யாண சுந்தரம் வழங்கும் 'சரணம் தேவி காவிரி' பரதநாட்டிய நிகழ்ச்சி.
செப் - 15: பாம்பே பெண்கள் குழுவினரின்  'சவுந்தர்ய லஹரி பாராயணம்', அனந்தராமன் குழுவினரின் பக்திப்பாடல்கள்.
செப் - 16: கோயில் பூசாரிகளின் ஊர்வலம், காமேஷ் வயலின், உமையாள்புரம் மாலி மிருதங்கத்துடன் சூர்யபிரகாஷின் வாய்ப்பாட்டு, கலாமித்ரா ராம்ஜியின் 'ஸ்ரீமகா பெரியவா' நாடகம்.

செப் - 17: மடிப்பாக்கம் மாலினி, பாலாஜி குழுவினரின் பரதநாட்டியம், கடலூர் கோபி பாகவதரின் 'பாகவத லீலைகள்' பஜனை.
செப் - 18: சோ.சோ.மீ.சுந்தரத்தின் 'கடவுளைக் காட்டும் காவிரி' சொற்பொழிவு, வீரமணி ராஜூவின் பக்தி இன்னிசை.
செப் - 19: திருக்குறள் ஒப்புவித்தல், கோவை ஜெயராம பாகவதரின் பஜனை.
செப் - 20: லஷ்மி பிரியா நடனக் குழுவினரின் 'பாவங்கள் போக்கும் காவிரி' நடன நிகழ்ச்சி, கடையநல்லூர் ராஜகோபால் பாகவதரின் பஜனை.
செப் - 21: ஜெயலட்சுமி சேகரின் வீணை இசை, திருச்சி கல்யாண ராமனின், 'கங்கையிற் புனிதமான காவிரி' சொற்பொழிவு.
செப் - 22: காரைக்குடி பைரவ குருக்களின் தேவார இன்னிசை, டாக்டர் ஹுசைனின் 'காவிரியும் கடவுளும்' சொற்பொழிவு.
 செப் - 23: பால நந்தகுமாரின் 'லய க்ஷேத்திரா' நடனம், ஹரிஹரன்- களக்காடு பாலாஜி குழுவினரின் பக்தி இன்னிசை.
செப் - 24: காவிரி ஆரத்தி நிகழ்ச்சி, 'நடந்தாய் வாழி காவிரி'
கவியரங்கம்.   
பன்னிரண்டு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு, காவிரி புஷ்கர விழா 2161 - ம் ஆண்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.