புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், செப்டம்பர் 06, 2017

20 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தம்- கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரசுடன் ரணில் ஆலோசனை

20ஆவது திருத்தச்சட்ட வரைபில் அவசரமாக சில திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று மாலை அலரி மாளிகையில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த விசேட கலந்துரையாடலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட மேலும் சில பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை குறித்தும் அதில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட ஏற்பாடுகள் பற்றியும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

மாகாண சபைகள் ஒத்திவைக்கப்பட்டால் அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் வகிபாகம் என்ன? மாகாண சபைகளின் அதிகாரங்கள் என்ன? என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது என்று குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.