தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

27 ஆண்டுகளுக்குப் பின் ஊறணி பாடசாலைக் காணி விடுவிப்பு

.

வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ஊறணி பாடசாலைக் காணி, இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஊறணியில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டமையை அடுத்து, அங்கு மக்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர். இவ்வாறு குடியமர்ந்துள்ள மக்கள், படையினரின் வசமிருக்கும் ஊறணி கனிஸ்ட வித்தியாலயத்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ஊறணி பாடசாலைக் காணி, இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஊறணியில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டமையை அடுத்து, அங்கு மக்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர். இவ்வாறு குடியமர்ந்துள்ள மக்கள், படையினரின் வசமிருக்கும் ஊறணி கனிஸ்ட வித்தியாலயத்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.இதற்கமைய, படையினர் இப்பாடசாலை அமைந்துள்ள 3.9 பரப்புக் காணியை விடுவித்தனர். இக்காணிகளை, யாழ். மாவட்டச் மேலதிக அரச அதிபர் எஸ்.முரளிதரனிடம் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி தர்ஷன கெட்டியாராச்சி, கையளித்தார்.