புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

நெல்லை அதிமுகவில் 3 அணிகளாக அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி நெல்லையில் அவரது சிலைக்கு அதிமுகவினர் 3 பிரிவுகளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக 2,3 பிரிவுகளாக பிரிந்து காணப்படுகிறது.  தற்போது துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும்  கடும் மோதல் நடந்து வருகிறது. எதிரும், புதிரும் ஆக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தவுடன் டி.டி.வி.தினகரன் தரப்பினரை ஒதுக்கினர். தற்போது தமிழக அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நீடிக்குமா? கவிழுமா? என்பது போன்ற சூழ்நிலை காணப்படும் நிலையில் இந்த அணியினர் இப்போது எதிர்த்துருவமாக செயல்பட்டு வருகின்றனர். 
அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுகவினர் 3 பிரிவுகளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆதரவாளர்களாக உள்ள நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் புறநகர் மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி ஒன்றாக இணைந்தாலும் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அவர்கள் இருபிரிவுகளாகவே செயல்பட்டு வருகின்றனர். வ.உ.சி பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மாலை போட்டபோதும் இந்த அணியின் பிரிவு வெட்டவெளிச்சமாக காணப்பட்டது. அதுபோல இன்றும், அறிஞர் அண்ணா சிலைக்கு ஓ.பி.எஸ் அணியினர் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாளை பகுதி முன்னாள் செயலாளர் காமராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.