புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

ஸ்லீப்பர் செல்களையும் சேர்த்து 35 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்- வெற்றிவேல் எம்.எல்.ஏ

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் யாரும் தப்பியோடவில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

‘கடந்த சில தினங்களுக்கு முன்னர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் தப்பியோடி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதில் உண்மையில்லை. எம்.எல்.ஏக்கள் சொந்தக் காரணங்களால், அவரவர் மாவட்டங்களுக்கு சென்றிருந்தனர். நாங்கள் அதர்மத்தையும், அநியாயத்தையும் எதிர்க்க ஒற்றுமையோடு இருக்கிறோம். 

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து துணைப்பொதுச்செயலாளர் முடிவெடுப்பார். புது ஆளுநர் நியமிக்கப்பட்டதும், ஓரிரு நாட்களில் எங்களது முடிவுகள் வெளியிடப்படும். நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்பதைக் காட்டத்தான் உங்களைச் சந்திக்கிறோம்.

மாணவி அனிதாவின் தற்கொலைக்குப் பின்னர், அங்கு நேரில் சென்று பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பார்த்துவிட்டு வந்திருக்கலாமே? இவர்களுக்கு பயம். நீட் தேர்வினால் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அந்தந்த மாநிலங்களின் பாடத்திட்டத்திற்கு ஏற்றாற்போல் நீட் தேர்வு நடத்தவேண்டும் என துணைப்பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கேட்காதீர்கள். இது ஆட்சியும், அரசும், கொள்கையும் சார்ந்த விஷயம். ஜெயலலிதா இருந்தால் நீட் தேர்வு நடந்திருக்குமா? அவரது ஆட்சி நடப்பதாக சொல்கிறார்களே? அதுவா நடக்கிறது? 

எங்கள் ஸ்லீப்பர் செல்கள் எல்லாம் சேர்த்து நாங்கள் 35 பேர் இருக்கிறோம். எடப்பாடியோடு இணையவேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையாக இருப்பதாக நினைத்தால், நம்பிக்கை வாக்கெடுப்பில் நிரூபித்துக் கொள்ளட்டும்.  

இன்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு முன்னர் அழைத்ததுபோல் அழைப்பு விடுக்கவில்லை. இதுவரை எங்களை அழைக்காமல், இந்தமுறை தொலைபேசியில் அழைக்கிறார்கள். சமாதானத்திற்கு இடமேயில்லை. அதனால்தான் எங்கள் ஆதரவில்லை என ஆளுநரிடம் முறையிட்டோம்.

இந்தக் கட்சி உழைப்பவர்களுக்கானது. இதை டன் கணக்கில் பணம் வைத்திருப்பவர்களிடம் பழக்கம் வைத்திருப்பவர்களையெல்லாம் கட்சி என்று ஏற்றுக்கொள்ள முடியாது’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.