புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, செப்டம்பர் 15, 2017

3 மணி நேர விசாரணைக்குப் பின் வெளியே வந்த யோசித ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவிடம், நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று மூன்று மணிநேரமாக விசாரணை நடத்தினர். பாட்டியிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும் கல்கிஸ்ஸ மற்றும் ரத்மலானை பிரதேசங்களில் அமைந்துள்ள இரண்டு காணித் துண்டுகள் தொடர்பிலும் மேலும் சில சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு யோசிதவிற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்ட போதிலும், தனிப்பட்ட காரணங்களினால் யோசித நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவில்லை.நேற்று முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் யோசித நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளித்திருந்தார்