வெள்ளி, செப்டம்பர் 08, 2017

மகிந்தவின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்கவுக்கு 3 வருட சிறைத்தண்டனை! - கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும்
தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம், தலா 3 வருட கடூழியச் சிறைத்தண்டனையையும், தலா 50 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம், தலா 3 வருட கடூழியச் சிறைத்தண்டனையையும், தலா 50 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சீல் துணிகளை விநியோகம் செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் இன்று அடையாளப்படுத்தியதையடுத்து, அனுஷ பெல்பிட மற்றும் லலித் வீரதுங்க ஆகிய இருவருக்கும் மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் தலா 50 இலட்சம் ரூபா வீதம் இருவரும் 100 இலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை செப்டம்பர் 20ம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனுஷ பெல்பிட்ட மற்றும் லலித் வீரதுங்க ஆகியோ