புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

புஷ்கரத் திருவிழாவில் கலந்து கொண்ட துர்கா ஸ்டாலின்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 6வது நாளாக நடைபெறும் புஷ்கரத் திருவிழாவில் இன்று காலை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.  

முன்னதாக நேற்று மாலை காவிரியின் வடகரையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் முன்னிலையில் தர்மபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரியார் சுவாமிக்கு, இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞாசம்பந்த சுவாமிகள் புஷ்பாஞ்சலி நடத்தி, பொற்காசுகளால் சொர்ணாபிஷேகம் செய்தார்.  இந்த நிகழ்ச்சி முடிந்தவுடனேயே இடியுடன் கூடிய பெருமழையால் மயிலாடுதுறை நகரமே குளிர்ந்தது.  மக்கள் மனம்மகிழ்ந்தார்கள்.  

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதினம் என்பதால் வெளியூரிலிருந்து பக்தர்கள் பல்லாயிரகணக்கானோர் குவிந்துவிட்டனர்.  வாகன நெரிசலால் நகரமே ஸ்தம்பித்தது.  இந்நிலையில், இன்று அதிகாலை 4.00 மணிக்கு துர்கா ஸ்டாலின் ரகசிய விசிட்டாய் துலாக்கட்டத்தில் புனிதநீராடுவதாக ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், 5.10 மணிக்கு துலாக்கட்டத்திற்கு துர்கா ஸ்டாலினும், அவரது தம்பி டாக்டர் ஜெயராஜமூர்த்தியின் மனைவியும் வருகை தந்தார்கள்.  அவர்களை புஷ்கரகமிட்டி ஒருங்கிணைப்பாளர் மகாலெட்சுமி வரவேற்றார்.  சுவாமி சன்னிதியில் சங்கல்ப்பம் செய்துகொண்ட அவர்களை காவிரிக்கு அழைத்துச் சென்று கிணற்றுநீரை மொண்டு அவர்கள் தலையில் புனிதநீர் தெளித்தார் மகாலெட்சுமி.  
அதிகாலையில் அன்னதானம் செய்ய வாய்ப்பில்லை என்பதால் 10 பேருக்கு வஸ்திரதானம் செய்தார் துர்க்கா ஸ்டாலின்.  அதன்பின் 8.30 மணியளவில் மாயூரநாதர் திருக்கோயிலுக்கு துர்க்கா ஸ்டாலின் சென்றார்.  கோயில் குளத்தில் பாதம் நனைத்து, தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டபின் சுவாமி தரிசனம் செய்தார்.  அக்கோயிலிலும் வரலாறுகாணாத பக்தர்கள் கூட்டம்.  அம்மன் சன்னிதியில் நீண்ட கியு வரிசை நின்றது.  துர்க்கா ஸ்டாலினும் வரிசையில் நின்றார்.  ஆனால், அங்கிருந்தவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் தெரிவித்து, உடனே உள்ளேபோக வழிவிட்டார்கள்.  தரிசனம் முடித்துவந்த அவர், தங்கியிருந்த தனியார் விடுதியில் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, அவரது சொந்தஊரான திருவெண்காடு நோக்கிச் சென்றார்.  

இன்று பக்தர்களை ஒழுங்குபடுத்தி நீராடவைப்பது போலீசாருக்கு படுசிரமமாகவே இருந்தது.  தர்ப்பணம் கொடுக்கும் இடத்திலும், கூட்டம் வரிசையில் நின்றது