தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு..!பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

முன்னதாக மத்திய அமைச்சரவையிலிருந்து 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அதையடுத்து இன்று புதிதாக 9 பேர் மத்திய அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். மேலும் 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டு அவர்களும் இன்று பதவியேற்று கொண்டனர்.

பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபரதான், மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத்துறை இணைஅமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஷிவ்பிரதாப் சுக்லா, சத்யபால்சிங், பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார்செளபே, ஆர்.கே.சிங், மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திரகுமார், கர்நாடகாவை சேர்ந்த அனந்தகுமார்ஹெக்டே, ராஜஸ்தானை சேர்ந்த கஜேந்திரசிங் ஷெகாவத், அல்போன்ஸ் கண்ணந்தனம், ஹர்தீப் சிங்பூரி ஆகிய 9 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.