வெள்ளி, செப்டம்பர் 01, 2017

தென் இந்தியாவுக்கு சுனாமி அபாயம்

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவியியல் அழுத்தம் காரணமாக தென் இந்தியாவுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியப் பெருங்கடல் மையம் சார்பாக நடைபெற்ற தேசிய மாநாட்டில் இந்த அதிர்ச்சிகர ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு மத்தியில் உள்ள கடல் மண்டலத்தில் அமைந்துள்ள டெக்டானிக் தகடுகள் நில அதிர்வை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன.

இந்திய நில மண்டலத்தின் அமைப்பின் அடிப்படையில் இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

தென் இந்தியாவை விட அதிக பாதிப்பு ஏற்படவிருப்பதாக அந்தமான் தீவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகள் வெவ்வேறு முடிவுகளை வெளியிட்டாலும், இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனத்தில் கொள்வது நல்லது என்றே சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.